மாற்றாள் கணவருடன் காதல் - கணவனையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்திய தாய்

மாற்றாள் கணவருடன் காதல் கொண்டு அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவேற்றி தனக்கும் தன் பிள்ளளைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் என கணவரொருவர் தன் மனைவிக்கு எதிராக மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மாற்றாள் கணவரோடு வீட்டை விட்டு சென்றிருக்கும் முறைப்பாட்டாளரின் மனைவி மற்றும் அவரது காதலரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, காதல் ஜோடிகள் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானர்.

குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய பேஸ்புக் கணக்கை பரிசோதனை செய்த போது, குறித்த பெண் தன் காதலனோடு நெருக்கமாக இருந்து எடுத்த புகைப்படங்களை கணவரினதும் தன் இரு குழந்தைகளினதும் பேஸ்புக் பக்கங்களுக்கு டெக் செய்துள்ளார் என பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

கணவர் தொடர்ந்து தனக்கும் தன் காதலனுக்கும் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு தொடர்ந்து குறை கூறி கொண்டிருந்தமையால் அவரை வெறுப்பேற்றுவதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிள்ளைகளுக்கு பாடசாலையில் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் அதுவரை தாயின் விடயம் தெரியாதிருந்த உறவினர்களும் தெரிந்து கொண்டு பலரும் பலவாறு கேள்வி கேட்பதால் ஒவ்வொரு நாளும் தானும் பல அவமானங்களை சந்திப்பதாக கணவர் தெரிவித்தார்.

இரு தரப்பினருடன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இரு தரப்பினரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதபதி, கணவரையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்தும் வகையிலான இதுப்போன்ற செயற்பாடுகளை இனி செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்ததோடு செய்த குற்றத்திற்கான மண்ணிப்பு கோருமாறும் குற்றமிழைத்த காதல் ஜோடிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -