கலகெதர, கதன்ஹேன, வலதென்ன, நாமல்தென்ன, அலவத்தேகம- சூரியகுமுர, வரகாகொட மற்றும் அமருப்ப ஆகிய கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (28) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
28 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் பயனடையள்ளனர். இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்பாளர் அம்ஜாத் முத்தலிப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அஸ்மின் மரிக்கார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜானக ஹதுர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.