ஏறாவூர் ஹிதாயத் நகரில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுத்தார், இதற்கு முன்னர் மக்களின் குறையறியும் நோக்கில் ஹிதாயத் நகருக்கு சென்றிருந்த போது அந்த மக்கள் தமது குடிநீர்ப்பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.
இதற்கமைவாக ஜமிய்யதுல் ஹஸனாத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகயினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (13) ஆம் திகதி முன்னெடுத்தார், தமக்கு வாக்குறுதியளித்தபடி குடிநீர் வசதிகளை வழங்கி வைத்த கிழக்கு முதலமைச்சருக்கு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.