நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
சட்ட விரோதமாக தயாரிக்கப்படதென சந்தேகிக்கப்படும் ஒருத்தொகை புகைத்தல் பீடியை அட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். அட்டன் நகரில் 23.08.2017 இரவு 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அட்டன் முருகன் ஆலயப்பகுதியிலே 143 பன்டல்களில் 1430 பீடிக்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பீடிகளில் சுகாதார எச்சரிக்கை விளம்பரம் மற்றும் லேபில்கள் ஒட்டப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பீடி தயாரிக்கப்பட்டு பீடி கம்பனிக்கு வழங்குவதாகவும் கம்பனியினாலே லேபல்கள் ஒட்பட்டடும் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்தார். லேபல் இல்லாமல் பீடி வைத்திருப்பது சட்ட விரோதமானது என பொலிஸார் தெரிவித்ததுடன் சந்தேக நபரை 24.08.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.