கல் எறியாதீர்கள்... கால்பந்து விளையாடுங்கள்

காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல் எறியும் 200 இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டு சொல்லிக்கொடுத்து நல்வழிப்படுத்தியுள்ளார், குவாத்ஷியா என்கிற கால்பந்து வீராங்கனை.



காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல் எறிவதும், ராணுவத்தினர் பதிலுக்கு பெல்லட் குண்டுகளால் தாக்குவதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. இதுபோன்ற சம்பவங்களால் மன வேதனையடைந்த கால்பந்து வீராங்கனை குவாத்ஷியா, இன்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை அடையாளம் காணத் தொடங்கினார். அவர்களிடத்தில் பேசி, இளைஞர்களின் கவனத்தை கால்பந்து பக்கம் திருப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டுமீது ஆர்வம் பிறந்தது.

தற்போது, குவாத்ஷியாவிடம் 200 இளைஞர்கள் பயிற்சிபெற்றுவருகின்றனர். ஸ்ரீநகரில், ஆங்காங்கேயுள்ள மைதானங்களில் தினமும் மாலை 3.30 மணி முதல் இருட்டும் வரை, இளைஞர்களுக்கு அவர் பயிற்சி அளிப்பார். குவாத்ஷியாவின் திறமையை அங்கீகரித்து, காஷ்மீர் மாநில அரசு 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இருபாலர் அணிகளுக்கு அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -