அதாஉல்லா என்றொரு தனி ஆளுமையினால் சிங்கள பேரினவாதிகளுக்கு மத்தியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அதாவது சிறியதொன்றும் குறைந்தளவான நீர் இணைப்புக்களையும் கொண்ட அம்பாறை மாவட்டத்துக்கு எதற்காக இரண்டு பிராந்திய காரியாலயங்கள் என்ற சிங்கள பேரினவாத கூக்குரல்களுக்கு மத்தியில்தான் அக்கரைபற்று பிராந்திய நீர் வழங்கள் காரியாலயம் உருவாக்கப்பட்டது.
கல்முனை மக்களுக்கும் எங்களுக்கும் எந்தப்பிரச்சினைகளும் கிடையாது மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மரணத்துக்கு பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், தலைவர் அதாஉல்லா அவர்களுக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச்செய்தவர்களும் அவர்கள்தான்.
இக்கட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்து வழங்கவேண்டும் அதனால் அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கள் காரியாலயத்தை பிரித்துக்கொடுப்பதில் என்ன தவறு என்று ஒருசிலர் கேட்கின்றனர். அவ்வாறென்றால் உதாரணமாக 10க்கும் மேற்பட்ட பிராந்திய காரியாலயங்களைக்கொண்டுள்ள கல்முனை நகரிலுள்ள (RDHS) பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் ஒருபிரிவினை அக்கரைபற்றுக்கு பிரித்து தருவார்களா..? அல்லது நாங்கள் பிரித்து கேட்பதுதான் முறையாகுமா..?
தலைவர் அதாஉல்லாவின் பின் இடம்பெற்ற அமைச்சு மாற்றத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு இரண்டு பிராந்திய காரியாலயங்கள் தேவையில்லை என்று அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கள் காரியாலயத்தை அம்பாரை நீர் வழங்கள் பிராந்திய காரியலயத்தோடு இணைத்துவிடுவதர்க்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது, வருமானத்திலும் நீர் இணைப்புக்களிலும் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் அம்பாறை பிராந்திய காரியலயத்தைவிட முன்னிலையில் இருந்ததனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் கிழக்கு மாகணத்துக்கு மத்தில் இருக்கும் மட்டக்களுப்பு மாவட்டத்துக்கு திருகோணமலையில் இருந்த DGM காரியாலயத்தை கொண்டுவந்தார் அதாஉல்லா ஆனால் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் மீண்டும் அக்காரியலயம் திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டு விட்டது.
இவைகளை கருத்தில் கொள்ளாத அமைசர் ஹகீம் ஏன் அக்கரைப்பற்றினை பிரிப்பதில் அக்கறை கொண்டுள்ளார்..?
பலமுறை இதுதொடர்பாக நாங்கள் எழுதியும் பேசியும் போராடியும் விட்டோம் எதற்கும் தயங்காத கற்றறிந்த மக்கள் எம்மிடம் இருக்கின்றோம், விவேகமாகவும் வீரத்துடனும் சிந்தித்து செயலாற்றக்கூடிய இளைஜர்கள் நம்மிடம் உள்ளோம். இன்னும் 10 நாட்களுக்குள் நலினப்படுத்துவதற்காக பிரிக்கபடவிருக்கும் அக்கரைப்பற்று நீர் வழங்கள் பிராந்திய காரியாலயம் தொடர்பில் நீங்களே நல்ல முடிவினை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.