ஜுனைட்.எம்.பஹ்த்-
புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இம்முறை காத்தான்குடி மீடியா போரம் முழு நிலவில் கிழக்கிலங்கை ஊடக உறவுகளின் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வை எதிர்வரும் 04.09.2017ம் திகதி மாலை 6.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணி வரை காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் நடாத்தவுள்ளது.
இச்சங்கம் காத்தான்குடி கடற்கரை முற்றவெளியிலுள்ள மஸ்ஜிதுல் அப்ரார் முன்பாக உள்ள நிஸ்மா பீச் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் முன்னேற்ற செயற்பாடுகளில் திறமைகாட்டிய அங்கத்தவர் எம்.எம்.எம்.மிப்றாஹ் மற்றும் அங்கத்தவர் நசார் அவர்களின் மகன் நஸ்றுல் ஹக் ஆகிய இருவரின் கௌரவிப்பு மற்றும் சிறப்பு உரைகள், கவியரங்கம், பாடலரங்கம், நாடகரங்கம், பட்டிமன்றரங்கம், நகைச்சுவையரங்கம், முகாமைத்துவ போட்டி நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளன.
நிகழ்வின் இறுதியில் பரிசளிப்பு, அன்பளிப்புப் பொருட்கள் வழங்கி ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.