இலங்கை மின்சார சபையினரும் உப்புவௌி பொலிஸாரும் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற 10 பேரை இன்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மின் இணைப்பினை சோதனையிட்ட வேளை அனுமதியின்றியும் திருட்டு தனமாகவும் மின்சாரம் பெற்றுக்கொண்டமை தெரியவந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆண்டாங்குளம்-04ம் கட்டை மற்றும் 05ம் கட்டை பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை சீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
#திருட்டு
#மின்சாரம்
#கைது