எம்.வை.அமீர் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதிஏ.எம்.ஜெமீலின் தேவையுடைய மக்களுக்கான 1000 இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாகபாலமுனை மக்களுக்கு 30.07.2017 ஆம் திகதி 150 கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஹுசைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கலாநிதி ஏ.எம்.ஜெமில் பிரதம அதிதியாக பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கண்ணாடிகளை வழங்கிவைத்தார்.
ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களை பிரதினித்துவப்படுத்தி 500பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது, முறையே நான்காம் கட்டமாக பாலமுனை மக்களுக்காக 150மூக்குக் கண்ணாடிகளை வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின்போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரின் பொதுசனத்தொடர்பு அதிகாரி ஏ,எல்.முக்தார் (ஜஹான்),கலாநிதி ஜெமிலின் பிரத்தியோகச் செயலாளர் சி.எம்.முனாஸ் உள்ளிட்ட அதிதிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கண்ணாடிகளை பெறுவோர்களும் கலந்துகொண்டனர்.