சொல்லுமிந்தக் கதையைநின்றுகேளுங்கள்
சிந்தையிலேஒற்றுமையைஉண்டுபண்ணுங்கள்
சிரிததுநாம் வாழ்ந்திடும் வழியைக் தேடுங்கள்
தனியானஅலகொன்றுகிடைத்திடும் போது
தடுத்திடகழுகுகள் அலையுதுபாரு
இனியென்னபொறுமையென்றுடன் சீறி
எழுந்திடுதோழாஎரிமலையாகி
ஆடுகள் நனையும் வேளையில் ஓநாய்
அழுவதுபோல்சிலஅசடர்கள் வந்து
பாடுவார் ஒற்றுமைகீதங்கள் நொந்து-பின்
பறந்திடுவார் தேர்தல் முடிவதுகண்டு
ஒற்றுமைகுறையும் என்றுசிலர் சொல்லி
ஒப்பாரிவைத்தெம்மைகீளுக்குத் தள்ளி
மற்றவர் அழுக்கைகழுவிடநினைக்கும்
மடையக்குநாமும் காட்டுவோம் தண்ணி
சாய்ந்தமரம் முன்புமொருதனிச்சபைதான்
சரித்திரம் சொல்லும் கதையுமிதுதான்
ஓய்ந்திடும்; தலைவர்களிங்குவந்துதான்
ஓற்றுமையென்னவென்றுகற்கவருவார்
சொந்தவூரைநாமும் தோளில் சுமந்து
சொர்க்கபுரியாக்குவோம் பகைமறந்து
அந்நியனாதிக்கம் மின்னுமெதற்கு - அதை
அடியோடுமாற்றுவோம் ஒன்றாயிணைந்து
எத்தனையோசபைகள் தனியாகுதின்று
எட்டப்பர் யாரும் இல்லையேஅங்கு
கொத்தனிமுறையென்றுநம்மையும்; அடக்க
கொக்கரிக்காரேசதிகாறர்கள் வந்து
தாயூரின் அடிமைச் சங்கிலியுடைத்து
தனியானசபையும் நமக்காய் அமைத்து
மேய்த்திடும் ஆட்களைவிரட்டியடித்து
மேன்மையடைவோம் நம்மைநாமாண்டு
தேவைதனையறிந்துஊருக்குசேவை
செய்திடும்தலைவரைதேடிநாமெடுத்து
பாவிகள் காட்டிடும் பழியெல்லாம் தடுத்து
பாரினிலுயர்வோம் தடையெல்லாமுடைத்து
அடிமையாய் நாமிங்குவாழ்ந்ததுபோதும்
அகற்றுவோம் தாயின் கண்ணீரைநாமும்
துடித்திடவேண்டும் இதற்கென இதயம்
துரோகியைவிரட்டத் தோழ்கொடுதோழா
வரிகள் :-
ஏ.எம்.ஸாஹீர்
பிரதம எந்திரி
கட்டடங்கள் திணைக்களம்
கல்முனை
பிரதம எந்திரி
கட்டடங்கள் திணைக்களம்
கல்முனை