கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள நோயாளர் விடுதி மற்றும் நவீன மருத்துவக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் ,கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த கட்டட நிர்மாணத்திற்கு 138 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.