மக்களின் காலடிக்குச் சென்று தேவைகளை நிறைவேற்றும் நடமாடும் சேவை..!

அனா-
னாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கமைய மக்களின் காலடிக்கு சென்று தேவைகளை நிறைவேற்றும் வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் கிராம சேகவர் பிரிவுகள் தோறும் நடமாடும் சேவை நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வாழைச்சேனை செம்மண்ணோடை 208டி கிராம சேவகர் பிரிவிலுள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நேற்று திங்கள்கிழமைநடைபெற்ற நடமாடும் சேவையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்களைப் பெற்றுக் கொண்டனர்.

அந்தவகையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமான சட்ட ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படதுடன், காலங்கடந்த பிறப்பு, இறப்பு, விவகாப் பதிவுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், காணிப் பிரச்சனை, பொலிஸ், தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகப் பிரிவு, சமூக சேவைகள் பிரிவு என்பவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான எஸ்கோ நிறுவனம் மற்றும் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் நிறுவனமும் (எஸ்.டி.சி) நிதி உதவியை வழங்கி வைத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -