கட்டார் விமானங்கள் சவூதி எல்லைக்குள் வந்தால் தாக்குதல் நடாத்தி வீழ்த்துவோம் -சவூதி அரேபியா

ட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவூதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவூதி அறிவித்துள்ளது.

கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந்நாட்டு விமானங்களை தாக்குதல் நடத்தி வீழ்த்துவதாக சவூதி எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் சீராக வைக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாக கட்டார் மற்றும் அதன் பிராந்திய நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கட்டார் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா தலைமையிலான நான்கு நாடுகள் இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன.

இந்நிலையில் பிராந்திய நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளை கட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

இவ்வாறான நிலை தொடருமாயின் வளைகுடாவில் மற்றுமோர் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நன்றி..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -