ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழுவின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் காத்தான்குடி அல் இக்பால் வித்தியாலயத்தின் சுற்று மதிலை புனரமைப்பதற்காக ரூபா மூன்று இலட்சமும்,காத்தான்குடி சாஹிரா விஷேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலையில் உள்ளக வீதி அமைப்பதற்காக ரூபா நான்கு இலட்சமும்,ஆரையம்பதி ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலின் முன்னேற்ற வேலைகளுக்காக ரூபா இரண்டு இலட்சமும்,பாலமுனை ஹிஸ்புல்லாஹ் வீதி இரண்டாம் குறுக்குக்கு 200 மீட்டர் நீளமான கிறவல் வீதி அமைக்க ரூபா இரண்டு இலட்சமும்,பாலமுனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்காக ரூபா மூன்று இலட்சமும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய காத்தான்குடி நெசவு நிலைய வீதியில் அமைந்துள்ள சமூக மதிப்பீடிற்கான அமைப்பிற்கு தளபாடங்களை பெற்றுக்கொடுக்க ரூபா ஒரு இலட்சமும்,புதிய காத்தான்குடி முஹைதீன் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ரூபா ஐம்பதாயிரமும் ,பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ரூபா ஐம்பதாயிரமும்,கர்பலா நகர் ஜாமியுல் மனார் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை பெற்றுக்கொடுக்க ரூபா அறுபதாயிரம் மற்றும் புதிய காத்தான்குடி ரிஸ்வி நகர் ஸலாமா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை பெற்றுக்கொடுக்க ரூபா அறுபத்தைந்தாயிரமும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக முபீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.