கூட்டு ஒப்பந்தத்தை மீறும் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டம்..!

நோட்டன்பிரீஜ் நிருபர் இராமசந்திரன்-
பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத் தொழிலாளர்களை நாளாந்தம் 17கிலோ தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என கோரியமைக்கமைய லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு தொழிலாளர்களால் இன்று காலை முதல் 11.30மணி வரை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் நாள் ஒன்றுக்கு தோட்டத் தொழிலாளி ஒருவர் 17கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப் போதிலும் கொழுந்து குறைவாகக் காணப்படும் காலப்பகுயில் 14, 15, 16 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் படி நாள் ஒன்றுகான கொடுப்பனவாக 730ரூபா வழங்கப்பட வேண்டும். இது இவ்வாறிருக்க கொழுந்து குறைவாகக் காணப்படும் காலப்பகுதியில் 10 – 15 கிலோ தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளருக்கு 730ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் போது தேயிலை கொழுந்து அதிகமாகக் காணப்படுகின்ற காலப்பகுதியில் நாளொன்றிற்கான வேதனத்தை பெற்றுக்கொள்வதற்காக 17கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனவும் தேயிலை கொழுந்து குறைவாகக் காணப்படுகின்ற காலப்பகுதியில் 14, 15, 16 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் படி நாள் ஒன்றுகான கொடுப்பனவாக 730ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் தேயிலை மலைகளில் நிறைந்திருக்கும் களைகளையு அழித்து தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், இந் நிபந்தனையை தோட்ட நிர்வாகங்கள் மீறினால் வழக்கு தொடரப்படும் எனவும் அன்மையில் ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். 

ஆனால் தற்போது கூட்டு ஒப்பந்த நிபந்தனைகளை மீறி ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதாகவும் கூட்டு ஒப்பந்தத்தின் போது கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதி தோட்ட நிர்வாகங்களுக்கு கிடைத்துள்ள போதிலும் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் அதில் உள்ளடங்கப்படவில்லை என தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது. இந்த விடயத்தினை 16.08.2017 புதன்கிழமை பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்;தின் போது லெட்சுமி தோட்ட முகாமையாளர் ஆர்.எஸ. கொத்தலாவல அவர்களை சந்தித்து கலந்துரையாடியப்போது இவ்விடயத்தை தெரிவித்தார்.

தேயிலை கொழுந்து அதிகமாகக் காணப்படும் காலத்திலும் சரி, கொழுந்து குறைவாகக் காணப்படும் காலத்திலும் சரி ஒரு தோட்டத் தொழிலாளி கட்டாயமாக 17கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால் மாத்திரம் அவர்களுக்கு 730ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என ஆர்.எஸ. கொத்தலாவல தெரிவித்தார். எனவே எது எவ்வாறிருப்பினும் லெட்சுமிதோட்டம் மத்திய பிரிவு மக்களுக்கு இழக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -