வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு இஷாக் ரஹுமான் அவர்களினால் முடிவுற்றுள்ளது.






அஸீம் கிலாப்தீன்-
நுராதபுர மாவட்டத்தின் ஹொரவபொதான தேர்தல் தொகுதியில், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட துருக்கராகம கிராமத்தில் 10/07/1951 இல் ஆரம்பிக்கப்பட்ட 650 மாணவர்களைக் கொண்ட அ/துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட காலமாக முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் முடிவுற்றுள்ளது.

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பலனாக குவைட் நாட்டின் தனவந்தர் ஒருவரினால் அல் ஹிமா சமூகசேவைகள் நிறுவனத்தின் மூலம் அ/துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 02 மாடிக்கட்டடம் (25x90) நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் (21/08/2017) இன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல்-ஹிமா சமூகசேவைகள் நிறுவனத்தின் செயலாளர் M.A.A. நூருல்லாஹ், A.R.M.Travels உரிமையாளர் A.R.M. தாரிக் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் உற்பட பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -