தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து சர்வதேச இளைஞர் தினத்தை நேற்றைய தினம் (சனிக்கிழமை) 12/08/2017 அன்று கொழும்பு நகரத்தில் நடாத்தியிருந்தது. போதைவஸ்த்தை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்த இளைஞர்கள், யுவதிகளால் விழிப்புணர்வு பேரணி சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நிறைவுசெய்யப்பட்டு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்விற்கு சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே , தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி கீரகள, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.