ஹிஸ்புல்லாஹ்வின் நிதியில் காத்தான்குடி டீன் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்..!

ஹம்ஸா கலீல்-
கௌரவ புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காத்தான்குடி டீன் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் திட்ட பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

காத்தான்குடி டீன் வீதி அலியார் சந்தி முன்றலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம் அஸ்பர் Jp, முன்னாள் பிரதி நகர முதல்வர் ஜெஸீம் Jp, முன்னாள் நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, அமீர் அலி (ஹாஜியார்) உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக வடிகாண் வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மழை காலத்திற்கு முன்பாக வடிகாண் வேலைகள் செய்து முடிவுருத்தப்பட இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையின் போது தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -