மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை பற்றிய அரச அதிகாரிகளுக்கான செயலமர்வு.!

யற்கையாகவே மனிதனுக்கு உரித்தான சமத்துவ உரிமைகளை அனுபவிப்பதற்காக பொதுக்கட்டிடங்களில் அணுகுவழிப்பாதை, பாதுகாப்பு, தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையும் அவர்களுக்கான அணுகுவழிப்பாதை பற்றிய அரச அதிகாரிகளுக்கான செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் அஸீஸ் மேலும்; தெரிவிக்கையில், சட்டத்தில் கூறப்பட்டதன்படி பொதுக்கட்டிடங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்படவில்லை என்பது எமது பகுதியில் பெரும் குறையாகவுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமையில் பெண்கள், பிள்ளைகள் அல்லது இயலாமையிலுள்ள ஆட்களின் முன்னேற்றத்திற்காக சட்டத்தின் மூலம் அல்லது துணைநிலை சட்டவாக்கத்தின் மூலம் அல்லது ஆட்சித்துறை நடவடிக்கையின் மூலம் சிறப்பேற்பாடு செய்வதை தடுத்தலாகாது எனக் கூறப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் அணுகுவழிப்பாதை தொடர்பான உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படீ, பொதுக்கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகளின் சுதந்திரமான நகர்வினைத் தடைசெய்வதாக அமையக் கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்று சகல அரச கட்டிடங்களும் இதற்கு வசதியாக நிர்மாணிக்கப்படல் வேண்டும். இதற்கு பொறுப்பாக அரச உயரதிகாரிகள் இருக்க வேண்டும். சட்டத்தினை அமுல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதிர்காலத்தி;ல் எடுக்கப்படவிருக்கிறது.

ஒரு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல் என்பவற்றிற்கு மனித உரிமை என்பது அத்தியவசியமானது. மனித உரிமைகள் சம்பந்மான எண்ணக்கரு எமது நாகரிகத்தின் உன்னதமான சாதனை எனலாம். 

ஒவ்வொரு மனிதனும் மனித உரிமைகளையும், சட்டத்தையும் கற்றறிந்து கொள்வதோடு இதன் மதிப்பினை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும். நாட்டின் அதியுயர் சட்டமாகிய அரசியல் அமைப்பினுள் அல்லது விசேட சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றினுள் மனித உரிமைகள் சாசனத்தில் உள்ள விடயங்களைக் உள்ளடக்கி சட்டமாக்குவதன் மூலமே உரிமைகளை நாம் சட்டரீதியாக பெற்றுக் கொள்ள முடியும் என மேற்கண்டவாறு தெரிவித்ததார். இந்நிகழ்வில் கமிட் நிறுவன உத்தியோகத்தர் கலைவேந்தன், சட்டத்தரணி. றம்சியா ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -