கையடக்க தொலைபேசி குறுந்திரைப்பட (MoFilm) போட்டி - மனோ கணேசன் அழைப்பு


தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இன்னொரு திட்டமாக, தேசிய சகவாழ்வினை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையர் எனும் அடையாளத்தை மூன்றாம் கண்ணால் பாருங்கள் என்ற தலைப்பில் தேசிய சகவாழ்வினை மேம்படுத்துவதற்காக, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டி ஒன்று நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு தகைமையாளர்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, 

இலங்கைப் பிரஜைகள் அனைவரும் நான்கு (04) பிரிவுகளின் கீழ் போட்டியில் பங்குபற்றலாம். பத்து (10) சிறந்த குறுந்திரைப்படங்களுக்குப் பணப்பரிசில்கள் வழங்கப்படுவதோடு போட்டிக்காக அனுப்பிவைக்கப்படும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிப் பிரிவுகள்: (1) சிங்கள குறுந்திரைப்படம் (2) தமிழ் குறுந்திரைப்படம் (3) ஆங்கில குறுந்திரைப்படம் (4) இருமொழி குறுந்திரைப்படம் (சிங்களம் மற்றும் தமிழ்)

கருப்பொருள்: 'இலங்கையர் - எமது அடையாளம் பன்மைத்துவம் - எமது சக்தி' எனும் கருப்பொருளின் கீழ் தேசிய சகவாழ்வினை மேம்படுத்துவதாக இந்த திரைப்படங்கள் அமைந்திருக்க வேண்டும், 

நிபந்தனைகள்: 

(1) போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் குறுந்திரைப்படமானது கையடக்கத் தொலைபேசியினால் மட்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஆக்கமாக இருத்தல் வேண்டும். 

(2) இந்த ஆக்கமானது அதிகபட்சம் 07 நிமிடங்களை கொண்டிருப்பதுடன் அவை குறித்த கருப் பொருளை மையமாக கொண்டிருத்தல் வேண்டும். 

(3) திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் (உள்ளடக்கம், இசை போன்றன) அறிவுசார் சொத்துடமைகள் தொடர்பாக அமைச்சினால் பொறுப்பேற்கப்படமாட்டாது. 

(4) ஒரு போட்டியாளர் ஒரு ஆக்கத்தினை மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும். 

(5) இந்த ஆக்கங்களின் காட்சித்தரமானது (Pixels) 720 க்கு அதிகமாக காணப்படுதல் வேண்டும். 

(6) அனைத்து ஆக்கங்களையும் MP4 காணொளியாக (Video) இறுவட்டில் (DVD) சமர்ப்பித்தல் வேண்டும். 

(7) ஆக்கத்துடன் போட்டியாளர்களின் பெயர் மற்றும் விபரங்களை இவ் விண்ணப்பப் படிவத்திற்கமைய சமர்ப்பித்தல் வேண்டும். 

(8) இது படைப்பாளியின் சொந்த ஆக்கமாகவும், அதனை இதற்கு முன்னர் இந்நாட்டிலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ தயாரிக்கப்பட்ட ஆக்கத்தின் பிரதியாக அல்லது தழுவலாக இருத்தல் கூடாது.

(9) இப்போட்டியில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பங்குபற்ற முடியும். 

(10) சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும், அவற்றை காட்சிப்படுத்துவதற்கான உரித்தும் அமைச்சுக்குரியது. 

(11) அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் நடுவர் குழுவினால் ஆக்கங்கள் தெரிவு செய்யப்படும். (12) இது தொடர்பான இறுதித் தீர்மானம் செயலாளருக்குரியதாகும். 

(13) போட்டிக்கான ஆக்கத்தினை அனுப்புவதற்கு எதிர்பார்க்கும் போட்டியாளர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விபரங்களை கொண்ட விண்ணப்பப் படிவம் ஒன்றினைத் தயாரித்து அதனுடன் உரிய ஆக்கத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

(14) இறுதி திகதி 25.09.2017 (திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்) 

பரிசுகள்: 

(1) முதலாம் பரிசு-ரூபா ஒரு இலட்சம்-100,000-00 
(2) இரண்டாம் பரிசு-ரூபா எழுபத்தி ஐயாயிரம்-75,000-00 
(3) மூன்றாம் பரிசு-ரூபா ஐம்பதாயிரம்-50,000-00 
(4) அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்.

விண்ணப்ப விபரங்கள்: 
(1) பெயர்: (திரு / திருமதி / செல்வி) ..........
(2) முகவரி .......
(3) தொலைபேசி இல.......
(4) மாவட்டம்..... 
(5) வயது .....
(6) தேசிய அடையாள அட்டை இல .... 
(7) ஆக்கத்தின் பெயர் ....
(8) போட்டிப் பிரிவு .....

விண்ணப்பதாரியின் உறுதியுரை: (1) இத்துடன் சமர்ப்பிக்கப்படும்...........................................................(ஆக்கத்தின் பெயர்) ஆனது கையடக்க தொலைபேசியினால் பதிவு செய்யப்பட்டுள்ள எனது சுய ஆக்கம் என்றும், அதனை இதற்கு முன்னர் எந்தவொரு ஊடகத்திலும் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என்றும் போட்டியின் சட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுகின்றேன் என்றும் உறுதியளிக்கின்றேனகையொப்பம் 
(2) கையொப்பம்... (3) திகதி....

விண்ணப்பங்கள் மற்றும் ஆக்கங்கள் பதிவு தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி: 
செயலாளர், 
தேசிய சகவாழ்வு, 
கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, 
இல. 40, புத்கமுவ வீதி, 
இராஜகிரிய. 
தொ.பே.இல :011-2883932 , 011-2883936, 
தொலை நகல்:011-2883785.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -