ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் அவர் எதிர்கொண்டுவந்த மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஏராளம்.
அந்தக் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானதுதான் மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டு.
அதைத்தான் இன்று எதிர்க்கட்சிகள் பெரிதாகத் தூக்கிப் பிடித்து அவரை அமைச்சுப் பதவியில் இருந்து விலகச் செய்தன.
ஆனால்,அவர் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றால் மீண்டும் இதுபோன்ற ஒரு சிக்கலை கிளப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளனவாம்.
அதுவும் வீடுகளை அன்பளிப்பாகப் பெற்ற சிக்கலான விவகாரம்தானாம்.
ஆட்சி மாற்றத்துக்கு முன் ரவி ஒரு நிறுவனத்திடம் வீடுகள் மூன்றைக் கொள்வனவு செய்திருந்தார்.
அந்த வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 லட்சம் ரூபா கொடுத்ததோடு சரி.நீண்ட காலமாக மீதிப் பணத்தைச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தார்.
பொறுமையை இழந்த அந்த நிறுவனம் நீங்கள் தந்த 30 லட்சம் ரூபாவை திருப்பித் தந்துவிடுகிறோம்.
நீங்கள் வீடுகள் மூன்றையும் திருப்பித் தந்துவிடுங்கள் என்று ரவியிடம் கூறியது.
அதற்கு ரவி இணங்கவில்லை.இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அவருக்கு நிதி அமைச்சர் பதவியும் கிடைத்தமை அவரது தில்லாலங்கடி விளையாட்டுக்கு வாய்ப்பாய்ப் போனது.
அவருக்கு அமைச்சுப் பதவி கிடைத்து இரண்டு மாதங்களில் ஒரு வர்த்தகர் முன்வந்து அந்த மூன்று வீடுகளுக்குமான மீதிப் பணம் முழுவதையும் செலுத்தி முடித்திருக்கின்றார்.
ரவியிடமிருந்து எவ்வாறான சலுகைகளைப் பெற்றமைக்காக இந்தப் பரிசு அமைச்சருக்கு மேற்படி வியாபாரி இடமிருந்து கிடைத்து என்ற உண்மை மஹிந்த அணிக்குத் தெரியுமாம்.
தேவை ஏற்படும்போது இந்த விவகாரம் ரவிக்கு எதிராக இறக்கிவிடப்படுமாம்.
அதாவது, இந்தச் சூடு தணிந்ததும் அவர் மீண்டும் அமைச்சுப் பதவியை பெறுவாராக இருந்தால் இந்த விவகாரம்தான் ரவிக்கு எதிரான அடுத்த ஆயுதமாகப் பயன்படுத்தும் என்கிறது மஹிந்த அணி வட்டாரம்.
அப்போ...அண்ணன் இனி அமைச்சுப் பதவியை நினைத்துப் பார்க்கவே முடியாது போல....
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்-