SLTJ அப்துர் ராஸிக், ஞானசார தேரருக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் தொடர்பான வழக்கு நேற்று (29.08.2017) விசாரனைக்கு வந்தது. இன்றைய விசாரனையில், வழக்கு தொடர்பான விளக்கம் கேட்டு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் 14.11.2017ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

GSP+ வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்க்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் இலங்கை அரசு கைவைத்ததை எதிர்த்து ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்திற்க்கு எதிராக இனவாதத்தை உண்டாக்கிய பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக அப்துர் ராஸிக் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் (SLTJ).

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -