பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை மனாரியன் நண்பர்கள் வட்டம் நடாத்திய பாடசாலை கிரிகட் அணிகளுக்கிடையிலான Y2K கிரிகட் காணிவேல் கடந்த ஒருவார காலமாக மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்று வந்தது இதில் மருதமுனையில் உள்ள அல்-மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்-ஹம்றா வித்தியாலயம்,பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 22அணிகள் பங்கு பற்றின.
இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (06-08-2017)மாலை மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப் போட்டியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் 2010ஆம் ஆண்டு ஒ.எல்.அணியும், 2007ஆம் ஆண்டு ஓ.எல்,அணியும் பங்குபற்றின இதில் 2007ஆம் ஆண்டு ஓ.எல்,அணி வெற்றி பெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக சப்ரகமுவ பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக், ஆசியா மன்றத்தின் செயற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், ஓய்வு பெற்ற அதிபர்களான ஏ.எல்.மீராமுகைதீன், ஏ.எம்.ஏ.சமட், அல்-ஹம்றா வித்தியாலய அதிபர் ஏ.குணுக்கத்துள்ளா, புலவர் மணிஷரிபுத்தின் வித்தியாலய அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு 10.000 ரூபா பணமும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. 2ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு 5000 ரூபா பணமும் கிண்ணமும் பிரதம அதிதியால் வழங்கப்பட்டது.சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.