இளைஞர் வலூட்டல் நிகழ்ச்சி (YDP) - 2017

.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை கல்வி, ஆன்மீகம், ஆளுமை மற்றும் திறன்விருத்தி ரீதியாக வழிநடத்தும் முகமாக ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் வருடந்தோறும் நடத்தப்படும் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி (Youth Development Program) இவ்வருடமும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய தெளிவு, ஆளுமை விருத்தி, கல்வி வழிகாட்டல், திறன்விருத்தி ரீதியாக அனுபவமிக்க வளவாளர்களின் மூலம் பயிற்றுவிக்கப்படுவதோடு நிகழ்சி முடிவில் முஸ்லிம் சமய மற்றும் காலாசார திணைக்களத்துடன் இணைந்த சான்றிதழும் வழங்கப்படும். இவ் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

சட்டத்தரணி றுடானி ஸாஹிர்
பொதுச்செயலாளர்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.

Tamil Medium:
M.Kawwam – 0767212141

Sinhala Medium:
Ashraf Ali: - 0776194156

English Medium:
Hashir Nawfar: 0771002545

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -