எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்தும் டெமாக் சவால் கிண்ணம் - 2017 சுற்றுப்போட்டியின் 1 வது அரையிறுதிப் போட்டி கடந்த (30) கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் கல்முனை டொபாஸஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன மோதின. இதில் சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுஇறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை டொபாஸஸ் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 176 ஓட்டங்களைசகல விக்கெட்டுக்களையும் இழந்து பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 25.4 பந்துவீச்சு ஓவர்களைமட்டும் சந்தித்து 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இப்போட்டியின் போது, பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக அதிக ஓட்டங்களாக 59 ஓட்டங்களைஆட்டமிழக்காமலும் மேலும் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியமைக்காக ஆசிரியர் எஸ். சுஜானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.