தனியார் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்துக்கு 120 மில்லியன் - இலங்கைக்கான வதிவிட இயக்குனர் எஸ்தர் எம். மக்கின்டொஷ்


பைஷல் இஸ்மாயில் -

னியார் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்துக்கு 120 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டங்களை 25 மாவட்டங்களிலும் முன்னெடுத்து வருவதாக வூஸ்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட இயக்குனர் எஸ்தர் எம். மக்கின்டொஷ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் கூட்ட மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய இளைஞர், யுவதிகள் அரசாங்க தொழில் என்ற மாய வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கின்றனர். இவர்களில் பலர் தங்களின் எதிர்கால கனவுகளை எவ்வாறு நிறைவேற்றலாம், இதற்கான வழி முறைகள் என்ன? என்ற ஏக்கத்திலும் உள்ளனர். இவ்வாறானவர்களின் கனவுகளை நனவாக்கி கொடுப்பதற்கு அவர்களை தனியார் துறைக்கு மாற்றி அவர்களின் கனவுகளுக்கு ஏற்ற சகல வழிமுறைகளையும் இந்த வூஸ்ட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

அதுமாத்திரமல்லாமல், அவர்கள் எதனை அடைந்துகொள்ள முயற்சிக்கின்றார்கள், அவர்களுக்கு எத்துறையில் மிகக் கூடுதலான ஈடுபாடுகள் உள்ளன என்று அடையாளம் கண்டு அதற்கெற்ற வகையில் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்ககைக்கு சிறந்த வழி வகைகளை செய்து கொடுக்கவுள்ளோம்.

அதற்காக 4 வகையான தனியார் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்தை தேசிய ரீதியாக முன்னெடுத்து இவ்வாறானவர்களை உள்வாங்கி அவர்களின் முன்னெற்றப் பாதைக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளோம்.

தற்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர கல்விகளை முடித்துவிட்டு இரிக்கின்ற இளைஞர், யுவதிகளின் எதிர்கால கனவை நனவாக்கும் நோக்கில் 90 பேர் சமூக சந்தைப்படுத்தல் பயிற்சியில் இணைந்துகொண்டு தங்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றார்கள்.

இவ்வாறு பல கனவுகளுடன் இரிக்கின்றவர்களை நாம் எவ்வாறு அடையாளம் காண்டு சமூக சந்தைப்படுத்தல் திட்டத்தில் இவர்களை இணைத்துக்கொள்ளலாம் அதற்கான தகுந்த பலம் ஊடகவியலாளர்களாகிய உங்களின் கைகளிலேயே உள்ளது. இவ்வாறானவர்களை ஒன்றா இணைத்து அவரிகளின் வாழ்க்கையினை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல ஊடகவியலாளர்கள் வழிவகுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -