நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
கெம்பியன் - லொயிலோன் பிரதான பாதையின் 1.6 கிலோ மீற்றர் தூரப்பாதையைச் செப்பனிடுவதற்கு 134 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷணனின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பாதை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக செப்பனிடப்படவுள்ளது.
இந்தப்பாதைக்கான புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 4 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் , மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.