நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலா சமுத்திரவள்ளி தோட்டபாதை திறப்பு விழா நிகழ்வு 04 .09..2017 நடைபெற்றது
பொகவந்தலாவை சமுத்திரவள்ளி தோட்டப்பாதையின் ஒரு பகுதி பாதையைச் செப்பனிடுவதற்கு 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள் அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக 10 இலட்சம் ரூபாவும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 5 இலட்சம் ரூபாவும் இந்தப்பாதை புனரமைப்புக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பாதை திறப்பு விழாவின் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உப இணைதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.