கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் ரூபா 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் MLM.பைஷல் தலைமையில் ஆரம்பமான இத்திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு பாடசாலைக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கேபி.எஸ்.ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜி ஆகியோருடன் அதிகாரிகள், அபிவிருத்தி குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலை வெறும் தகரக் கொட்டில் ஒன்றில் இயங்கிவந்த இப்பாடசாலையின் அவல நிலையினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க 15 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து இப்பாடசாலையை மூன்று மாடிகளாக நிர்மாணித்து பூர்த்தியாகியுள்ளன.
குறித்த பாடசலை ஆரம்பப் பிரிவுக்கானதுடன் 250 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.