தேசிய நல்லிணக்க மற்றும் நல்லிணக்கத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்திற்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கால் நடைவளர்புக்கான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கென 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.
இந் நிதி மூலம் 100 குடும்பங்களுக்கு தலா 150 ,000 ரூபா பெறுமதியான கால்நடை வளர்பிக்கான வாழ்வாதார மானியம் உதவித்தொகை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன
ஆடு மாடு ஆகிய காநடைகளை வளர்ப்பதற்கே இவ் மானிய உதவி வழங்கப்படவுள்ளன, பயனாளிகள் தெரிவு பூர்த்திசெய்யப்பட்டுள்ளது விரைவில் இவர்களுக்கான வாழ்வாதார உதவி கையளிக்க சகல நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பயனாளிகளை பிரதேச செயலகத்திற்கு அழைத்து இவ்வாழ்வாதார உதவிகளை பயன்படுத்தவேண்டிய வழிமுறைகுறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.விரைவில் வாழ்வாதார உதவி கையளிக்கப்படவுள்ளது.
#மூதூர்
#வாழ்வாதாரம்
#பிரதேச செயலகம்
#நிதி
#திருகோணமலை மாவட்டம்

