காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டில் 52தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு சின்னாபின்னமாகியிருக்கும் திராய்க்கேணித் தமிழ்க்கிராமத்தை ஜேர்மனியைச்சேர்ந்த இலங்கையர்ஒருவர் தத்தெடுத்துள்ளார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான கோடீஸ்வரன் என்பவரே இவ்விதம் இக்கிராமத்தைத் தத்தெடுத்தவராவார்.இவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஜேர்மனியக்கிளையின் சிரேஸ்ட்ட உறுப்பினராவார்.
இவரும் ஜேர்மனியக்கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர் கடந்த மாதம் இலங்கைக்குவந்து அம்பாறை மாவட்ட பிரபல சமுகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பைஏற்று படுகொலைக்கு இலக்கான திராய்க்கேணிக்கிராமத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு அந்தமக்களையும் அவர்கள் வாழும் சேதமடைந்த குடிசைகளையும் நேரடியாகக் கண்ணுற்றவிட்டு மனம் கலங்கினார். அந்த இடத்திலேயே இவர்களது இல்லிடப்பிரச்சினைக்கு தாம் உதவுவதாகக்கூறிச்சென்றார்.
அவர் ஜேர்மன்சென்று மறுநாள் திராய்க்கேணியை தாம் தத்தெடுப்பதாகவும் முதற்கண் 16வீடுகளை கட்டிக்கொடுக்குமாறும் சமுகசேவையாளர் கி.ஜெயசிறிலைக் கேட்டுக்கொண்டார்.
அதன்பிரகாரம் அந்த 16வீடுகளுக்குமான அடிக்கல்நடும் நிகழ்வு திராய்க்கேணி அமைந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது. கிராமத்தலைவர் சின்னத்தம்பி கார்த்திகேசு கிராமசேவையாளர் கே.நல்லரெத்தினம் சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பலர் அந்நிகழ்வில் கலந்துகொண்டுஅடிக்கல்லை நட்டுவைத்தனர்.
16வீடுகளுடன் மேலும் பல உதவிகளை தாம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.
தற்போது 5வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகள் தற்போது கட்டப்பட்டுவருகின்றன. அதன்திறப்புநிகழ்வில் ஜேர்மனிலிருந்து மகான்கோடீஸ்வரன் வந்து கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.