19வது கொடகே தேசியச் சாகித்திய விருது விழா எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல்3.00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இந்த விழாவில் மூத்த ஊடகவியலாளர் சோமவீர சேனாநாயாக்க , மற்றும் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுவார்கள்.
மேலும் இவ்விழாவில் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகளை பண்டிதர் சிறி திலகசிரி,(சிங்களம்) ஐயாத்துரை சாந்தன்,(தமிழ்), ரஜீவ விஜேயசிங்க ஆகியோர் பெற்று கொள்வார்கள்.
இவ்விழாவில் 2016 ஆம் வெளிவந்த சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை இலக்கிய நூல்களுக்கு விருதுகளும் பணமுடிப்பும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.