வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 2017ம் வருடத்திற்கான பொலிஸ் பரிசோதனை




முர்சித் வாழைச்சேனை-

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுக்களினால் சமர்பிக்கப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.சமன் யட்டவர ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆளுமை, தோற்றம், ஆரோக்கியம் என்பன மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டது.

இங்கு பொலிஸ் பரிசோதனை மற்றும் பொலிஸ் வாகனப் பரிசோதனை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக தயானந்த கலந்து கொண்டார்.

பொலிஸ் பரிசோதனை மற்றும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள், ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -