வடமாகாண சபையின் சுற்றுலா மகாநாடு
யாழ் பொது நூலக கேட்போர் கூடம், யாழ்ப்பாணம்
25.09.2017 திங்கட்கிழமை பிற்பகல் 13.30 மணியளவில்
முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் சுற்றுலா தினக் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக
கொண்டாடப்படும் செப்டெம்பர் 25ம் திகதியாகிய இன்று வடமாகாணசபையும் சுற்றுலா
தொடர்பான சுற்றுலாத்துறை ஆரம்ப தந்ரோபாய திட்டங்களை முன்மொழிந்து அவை
தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுகின்ற இவ் வேளையில் இந்நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத போதும் எனது வாழ்த்துச்
செய்தி ஒன்றை அனுப்பி வைப்பதில ; மகிழ்வடைகின்றேன்.
இந்த நாட்டில் நடைபெற்ற 30 ஆண்டுகால நீண்ட யுத்தத்தின் விளைவாக
வடபகுதியின் சுற்றுலா தொடர்பான முன்னெடுப்புக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி பூச ;சிய நிலையில ; காணப்பட்டது. இதனால் இப்
பகுதிகளில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் பல சுற்றுலா மையங்கள்
கவனிப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில ;, இச ; சுற்றுலா மையங்கள் பற்றி
உள்ளூரில் வசிக்கின்ற மக்கள் கூட அறிந்திருக்காத நிலை ஏற்பட்டது. சுற்றுலா
பயணிகளை மிகவும் கவரக் கூடிய மணற்பாங ;கான பல கடற்கரை சுற்றுலா
மையங ;கள் கவனிப்பார் அற்று புதர் மண்டிக ; கிடக்கின்றன.
சுற்றுலாத் துறையை முறையாகப் புனரமைத்து சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய
மீள ; கட்டுமானங்களுடன் சுற்றுலா மையங்களை மீள் பொலிவுறச் செய்வதன ; மூலம்
வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை வருமானத்தை உயர்த்துவதுடன்
இதனோடிணைந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை
வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யலாம். உப தயாரிப்புக்களான உணவு வகைகள்,
உள்ளூர் இனிப்பு வகைகள் மற்றும் வடபகுதிக்கே உரித்தான ஒடியல், பனாட்டு
போன்ற பனை உற்பத்திகள ; ஆகியவற்றிற்கு நல்ல கிராய்க்கி ஏற்படக் கூடிய
2
வாய்ப்புக்கள் உண்டு. எமது கடலுணவுகள் அவற்றின் சுவையின் நிமித்தம் பிரசித்தி
பெற்றுள்ளன.
வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட ;ட பின்னர் கடந்த 03 ஆண்டுகளில் சுற்றுலா
தொடர்பான பல வேலைத் திட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக
முன்னெடுத்திருக்கின்றோம். எனினும் இத் துறையை ச Pராக முறையான தந்திரோபாயத்
திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வதற ;கு நிதிப் பற்றாக்குறை ஒரு பாரிய
பிரச்சனையாக எம்மிடையே காணப்படுகின்றது. இது தொடர்பாக நாம் மத்திய அரசின்
உதவிகளை பெற்றுக் கொள்வதற ;கான பல திட்டங்களை தயாரித்து அவை
தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். கௌரவ பிரதம
மந்திரி இரணில் விக்கிரமசிங்க இது பற்றி மிக்க அக்கறை கொண்டுள்ளார். அவரது
நெறிப்படுத்தலின் கீழ் கௌரவ ஜோண் அமரதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர்
அவர்கள் சுற்றுலா செயலணி ஒன்றை நியமித்துள்ளார். சுற்றுலா அபிவிருத்தியானது
மத்திய அரசாங்கத்தின் கீழ் பின்வரும் நான்கு நிறுவனங்கள் மூலம்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
1. ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (ளுடுவுனுயு)
2. ஸ்ரீலங்கா சுற்றுலா மேம்பாட்டு அலுவலகம் (ளுடுவுPடீ)
3. ஸ்ரீலங்கா சுற்றுலா மரபொழுங ;கு அலுவலகம் (ளுடுஊடீ)
4. ஸ்ரீலங்கா சுற்றுலா மற்றும் உணவக முகாமைத்துவ நிறுவனம் (ளுடுஐவுர்ஆ)
இவை அனைத்துடனும் நாம் தொடர்பு வைத்து வருகின்றோம்.
ஆகவே இன்றைய இந்த நிகழ்வானது எமது மூலோபாயத் தந்திர திட்டங்களின் ஒரு
ஆரம்ப நிகழ்வாகவே கொள்ளப்படலாம். எமது திட்டங்களை முறையாகச்
செயற்படுத்துவதற்கான உதவிகள ; அரசாங்கத்திடமிருந்தும் பிற வழிகளிலும்
கிடைக்கப்பெறும் பட்சத்தில் வடமாகாணம் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
சுற்றுலாப் பகுதியாக உருமாற்றம் பெறும் என்பதில் எமக்கு ஐயமில ;லை.
வடபகுதியின் சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்கள் ஒரு வரையறைக்குள ;
கொண்டுவரப்படாமையால் இச ; சுற்றுலா நடவடிக்கைகள் இத ;துறையுடன்
சம்பந்தப்படாத பாதுகாப்பு தரப்புக்கள், வெளியில் இருந்து வந்துள்ள தனியார் என
பலரின் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது சுற்றுலா
வருமானங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அல்லது வேறு பிரிவினர்க்கு மேலதிக
வருமானமாகப் போய்ச ; சேரும் ஒரு நிலை காணப்படுகின்றது.
3
நாம் இவை தொடர்பில ; விழிப்பாக இல ;லாவிடின் எமது நீண்ட வரலாறுகளும்
சரித்திரங ;களும் காலத ;துக்குக் காலம் ஏனையவர்களின் நன்மைகளுக்கு ஏற்றவாறு
மாற்றியமைக்கப்பட ;டு நாம் இங ;கு குடியிருந்ததற்கான சான்றுகளே இல்லாமல்
ஆக்கப்பட ;டுவிடும். கரவாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய பிறழ்வான
வரலாறுகள் ஊர்ஜிதப்பட்டுவிடுவன.
இந்த நிலையில் எமது பகுதிகளில் காணப்படும் அனைத்து விடயங்களும்
நிகழ்வுகளும் ஒரு வரையறைக்குள ; கொண்டுவரப்பட வேண்டியது கட்டாயமானது.
இதன் பொருட்டு நியதிச் சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள ;ளன.
சுற்றுலாத்துறை தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை ஆரம்பகட்ட நிகழ்வுகளாக
முன்னெடுத்து வருக்கின்றோம். எம்மிடம் சுற்றுலா மையங்களை இலகுவில்
அடையாளப்படுத்தக்கூடிய ஒரு வரைபடம் இல்லை. சுற்றுலாத்துறைக்கான
முறையான வழிகாட்டி நூல்கள் எம்மிடம் இல்லை. சுற்றுலா மையங்களை அண்டிய
பகுதிகளில் காணப்படக்கூடிய சர்வதேச தரம் வாய்ந்த உள்ளூர் உற்பத்திகளின்
பட்டியல்கள் அடங ;கிய துண ;டுப்பிரசுரங்கள் இல ;லை. உதாரணமாக எமது பனை
உற்பத்திகளுக்கு உலகளாவிய ரீதியில ; நல்ல சந்தை வாய்ப்புக்கள் உண்டு. கருப்ப
நீரில ; இருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்கட்டி, வெல ;லம் ஆகியவற்றை
வெளிநாடுகளில ; உள்ள எம்மவர்கள் மட்டுமன்றி மேலைத்தேயத்தவர்களும் விரும்பி
உண்ணுகின்றார்கள். ஆகவே இவை போன்ற உள்ளூர்த் தயாரிப்புக்கள ;
மேம்படுத்தப்படுவதுடன் இவற்றின் உற்பத்திகள ; கூடிய சுகாதார முறைகளுடன்
கவர்ச்சியான மேலுறைகளுடன் தயாரிக்கப்பட வேண்டும். இவை பற்றிய விபரங ;களை
வெளிக் கொண்டுவரும் உரிய ஆவணங்கள் விரைவில ; தயாரிக்கப்பட
வேண்டியிருக்கின்றது.
எமது சுற்றுலாத்துறை அபிவிருத்தியானது சுற்றுச ; சூழல், எமது சமூக – கலாசாரப்
பின்னணி ஆகியவற்றை மதித்து நிலையான அபிவிருத்திக்கு வித்திடுவதாக
அமையவேண்டும். சுற்றுலாத்துறை என்றதும் எமது மக்களின் மனதில் புலன் உணர்வு
சார்ந்த ஒரு எதிர்மறையான காட்சியே சித்திரிக்கப்பட ;டுள்ளது. எனவே தான் சுற்றுலா
எமக்கு வேண்டாம் என்பாரும் எம்மிடையே உண்டு. ஆனால் சுற்றுலாவை உயர்வான
ஒரு நிலைக்குங் கொண்டு செல்லலாம், அடி மட்ட நிலைக்குங் கொண்டு செல்லலாம்
என்பதை எம்மவர் உணர்ந்து கொள்ள வேண்டும். சுற்றுலாவில ; பல பிரிவுகள் உண்டு.
மருத்துவம்சார் சுற்றுலா, சமயங்கள்சார் சுற்றுலா, உணவுசார் சுற்றுலா, கடல்
4
விளையாட ;டுக்கள்சார் சுற்றுலா, வரலாறுசார் சுற்றுலா, மரபுரிமைசார் சுற்றுலா என்று
சுற்றுலாவானது பல பரிமாணங்களில் இன்று விருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
எமது பிராந்தியத்தில் இருக்கும் மரபுரிமைப் பொருட ;கள் பல சூறையாடப்பட்டு
வருகின்றன. கோயிற் சிலைகள ; காணாமல் போவதை வெறும் களவு என்று கொள்ள
முடியாதிருக்கின்றது. சர்வதேச மட்டத்தில் இச் சிலைகள் கடத்தப்பட்டு பல கோடி
ரூபாய்களுக்குக ; கரவாக விற்கப்பட்டு வருகின்றன. எனவே எமது கோயில்
சொத்துக்கள ;, சிலைகள், மரபுரிமைப் பொருட ;கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்கான சட்ட திட்டங்களை இயற்றி வருகின்றோம்.
சுற்றுலா உணவகப் பாடசாலைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
அதன் மூலம் எமது இளைஞர் யுவதிகள ; வருங ;காலத்தில் போதிய வேலைவாய்ப்புப்
பெற ஊக்குவித்து வருகின்றோம்.
பலாலி விமானத்தளமானது மேலும் காங்கேசன்துறை கடற்பாலத்தளம் ஆகியன
சுற்றுலாவின் பொருட ;டு புனரமைக்கப்பட ;டு வான், கடல் வழிப் போக்குவரத்துக ;கு
திறக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்து அது சம்பந்தமாகவும் நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றோம். உள்ள10ர் வான்வழிப் பிரயாணமும் அரசாங்கத்தால்
ஊக்குவிக்கப்படுகின்றது.
நீடிய கால சுற்றுலா முதன்மைத் திட்டமொன்றின் அவசியத்தைப் புரிந்து அதனை
முழு மாகாணத்திற்குமாகத் தயாரிக்க நடவடிக்கைகள ; எடுத்து வருகின்றோம்.
இருக்கும் அறிக்கைகளையும் புதிய தேசிய மட்ட ஆராய்ச்சி அறிக்கைகளையும்
ஒன்று சேர்த்து அவற்றின் அடிப்படையில் இவற்றைத் தயாரித்து வருகின்றோம்.
எமது தீவகப் பகுதி சுற்றுலா அபிவிருத்திக்கு அதிசிறந்தன. உரிய திட்டமிடல்,
நடைமுறைப்படுத்தல் மூலம் அவை சிறந்த சுற்றுலா மையங்களாக மாற்றப்படுவன.
இந்த தீவுகளைத் தம் வசமாக்க பல தனியார்கள் கடும் பிரயத்தனங்களில்
ஈடுபட்டுள ;ளார்கள். நாங்கள ; விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசாங்க
உதவியுடன் எமக்குத் தெரியாமல் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அவதானமாக இருத்தல் அவசியம். எனவே தான்
எமது பகுதிகளின் பாரம்பரியத்திற்கு ஏற்றவாறு சூழலுக ;கும் கலை கலாசாரத்திற்கும்
ஏற்றவாறு புதிய சுற்றுலாக் கலாச்சாரம் ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டிய
அவசியம் எழுந்துள்ளது.
5
இதற்கு ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக்கான நோக்குகள் பற்றிய
ஆவணம் உறுதுணையாக நிற்குமென நம்புகின்றோம். அவ்வாறான புதிய சுற்றுலா
கலாசாரத்தை இயற்றும் போது எமது புலம்பெயர்ந்த மக்களின் உள்ளீடல்களையும்
நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மேற்படி புதிய கலாசாரத்தை
நடைமுறைப்படுத்த உதவி செய்ய வல்லவர்கள். இக்கலாசாரத்தில் நாம் மனதுக்கு
எடுக்க வேண்டியது கூடிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதல்ல. கூடிய
செலவு செய்யக் கூடிய குறைந்த தொகையினரையே நாங்கள் குறிவைக்க வேண்டும்.
சில வெளிநாட ;டார் வந்து பல நாள் இருந்து பத்தாயிரத்துக்கு மேல் செலவு
செய்யாமலே செல்வதுண்டு. சில வெளிநாட்டார்கள் வந்து சில நாட்களே இருந்து
சிறப்பாக செலவு செய்து திரும்புவார்கள ;. எமது கரிசனை பின்னையவர்களின் மேல்ப்
பதிய வேண்டும். அதற்கேற்றவாறு அவர்கள் உரிய செலவு செய்ய அவர்களுக்குத்
தேவையானவற்றை நாம் வழங ;க முன்வர வேண்டும்.
எனவே இவை பற்றியெல்லாம் சிந்திப்பதற்கும் இவை தொடர்பான முன்னேற்றகரமான
நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எமக்கு பல்வேறு வகைகளிலும் உதவிகளைப்
புரிவதற்கும் சர்வதேச நிறுவனங ;களும், யாழ் பல்கலைக்கழகமும் இன்னும் துறைசார்
விற்பன்னர்களும் முன்வந்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.
புத்தி ஜீவிகள ; அடங்கிய இக் குழுவினரின் உதவி ஒத்தாசைகளுடனும் மத்திய
அரசின் நிதி அனுசரணைகளுடனும் வடபகுதியின் சுற்றுலாத்துறை மிக விரைவில்
நவீனமயப்படுத்தப்பட்டு வடபகுதி சிறந்த சுற்றுலா மையமாக மாறுகின்ற நாள் வெகு
தூரத்தில் இல ;லை எனத ; தெரிவித்து சுற்றுலாத்துறையின் விருத்திக்காக
பாடுபடுகின்ற அனைவரையும் இச ; சந்தர்ப்பத்தில் வாழ்த்துகின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்