தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடாத்தும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று புதன்கிழமை (27/09) அன்று மாலை 04.00 மணியளவில் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு அரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் நிரோஷான் பெரேரா, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் ஏரந்த வெலியங்கே, மாகாண மற்றும் மாவட்ட பணிப்பாளர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், விளையாட்டு வீர , வீராங்கனைகள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத் தேசிய இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் 30ம் திகதி பரிசளிப்பு வைபவத்துடன் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -