பாறுக் ஷிஹான்-
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று (2)அனுஸ்டிக்கப்பட்டது.
32ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் எதிர்கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் கேசவன் சயந்தன் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.