கலப்புத் தேர்தல் முறையும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களும்- பாகம் 3

ன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்ற கலப்புத் தேர்தல்முறை நியூசிலாந்து தேர்தல்முறையை அடிப்படையாக கொண்டதால் அதனை அடியொற்றி எடுகோள் ரீதியில் பாராளுமன்றம் 200 ஆசனங்களைக் கொண்டதாக எடுத்துக்கொண்டு இரட்டை வாக்கு எவ்வாறு செயற்படுகின்றது; என்று பாகம் இரண்டில் பார்த்தோம். அதில் 60:40 இற்கும் 50:50 இற்கும் எதுவித வேறுபாடுமில்லை; என்பதையும் கண்டோம். ஞாபகமூட்டலுக்காக சுருக்கமாக மீண்டும் overhangஐ, கடந்த பாகத்தில் கூறியதுபோன்று தவிர்ப்பதற்காக சிறிய ஒரு மாற்றத்துடன் தரப்படுகின்றது.

60:40 முறை உரித்தான தொகுதி+விகிதாசாரம்
------------- ஆசனங்கள்

-----------

கட்சி-1- 45%. 90 70+20=90
கட்சி-2- 30%. 60 20+40=60
கட்சி -3- 15%. 30 20+10=30
கட்சி- 4- 5%. 10 6+4 =10
கட்சி -5- 3%. 6 2+4 = 6
கட்சி- 6- 2%. 4 2+2 = 4
------- --- --------
100%. 200 120+80=200

50:50 முறை
------------
கட்சி-1- 45%. 90 60+30=90
கட்சி-2- 30%. 60 20+40=60
கட்சி-3- 15%. 30 10+20=30
கட்சி-4- 5%. 10 6+4 =10
கட்சி-5- 3%. 6 2+4 = 6
கட்சி-6- 2%. 4 2+2 =4
------- ------ ----------
100%. 200 100+100=200

இங்கு கவனிக்க வேண்டியது 60:40 ஆனாலும் 50: 50 ஆனாலும் ஒரு கட்சி கட்சிக்குரிய வாக்கு எத்தனை விகிதம் பெறுகின்றதோ அதற்கேற்ற விதத்தில் மொத்த தொகுதிகள் பெறப்படும். அந்த மொத்தத் தொகுதிகளில் இந்த விகிதாசார வித்தியாசம் தாக்கம் செலுத்தாது.

கூடுதலான தொகுதிகளை வென்றால் குறைவாக பட்டியல் ஆசனம் கிடைக்கும். குறைவாக தொகுதிகள் வென்றால் கூடுதலான பட்டியல் ஆசனம் கிடைக்கும். ஆனால் பெற்ற வாக்கு விகிதத்திற்கேற்ற மொத்த ஆசனங்களில் மாற்றம் வராது.

ஒற்றை வாக்கு முறை
-------------------
ஒற்றை வாக்குமுறை என்பது தொகுதியில் வேட்பாளருக்கு அளிக்கப்படுகின்ற வாக்கை வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் பாவிக்கின்ற அதே நேரம் அதே வாக்கை கட்சியின் வாக்காகவும் கணிப்பதற்குப் பயன்படுத்துவது.

மாகாணசபைத் தேர்தல் மாவட்டரீதியில் கணிப்பிடப்படுவதால் ஒரு மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுத்து இதனை விளங்குவோம்.

மாவட்டம் X
-------------
அம்மாவட்ட மொத்த ஆசனம் 20
60:40 ஆனால் தொகுதி 12, விகிதாசாரம் 8
50:50 ஆனால் தொகுதி 10, விகிதாசாரம் 10

இப்பொழுது வாக்காளர்கள் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ஒற்றை வாக்கானால் அந்த வாக்கு வேட்பாளருக்குரிய வாக்காக கருதப்படுகின்ற அதேவேளை கட்சியின் வாக்காகவும் கருதப்படும்.

60:40 என வைத்துக்கொண்டு உதாரணத்தைப் பார்ப்போம். ஒவ்வொரு கட்சியும் 12 தொகுதிகளிலும் பெற்ற வாக்குகள் எடுகோள் ரீதியில் இங்கு தரப்படுகின்றன.

பெற்ற உரித்தான தொகுதி+விகிதா
வாக்கு ஆசனம் சாரம்
விகிதம்
--------- -------- ------------

கட்சி-1- 40%. 8 6+2=8
கட்சி-2- 30% 6 4+2=6
கட்சி-3- 20% 4 2+2=4
கட்சி-4- 10% 2 0+2=2
---- ---- --------
100% 20 12+8=20

( இலகுவான கணிப்பிடுதலுக்காகவும் புரிதலுக்காகவும் முழு இலக்கம் தரப்படுகிறது; நடைமுறையில் அது சாத்தியமில்லை என்ற போதும்கூட)

ஒவ்வொரு கட்சியும் அந்த மாவட்டத்தில் பெறுகின்ற மொத்த வாக்கு விகிதாரத்திற்கேற்ப ஆசனம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது தற்போதைய விகிதாசார நடைமுறையின் படியே ஆசனம் தீர்மானிக்கப் படுகின்றது. தொகுதிகளில் வென்ற ஆசனம்போக மிகுதி பட்டியலில் இருந்து வழங்கப்படும்.

இதனை நீங்கள் 50: 50 ஆக கணக்குப் பார்த்தாலும் ஆசன எண்ணிக்கையில் மாற்றம் வராது. உதாரணமாக, கட்சி-1- பெற்ற வாக்கு விகிதம் 40% ஆனால் 20 தொகுதிகள் கொண்ட மாவட்டத்தில் கிடைக்கின்ற ஆசனங்களின் எண்ணிக்கை அப்பொழுதும் எட்டுத்தான்.

எனவே பெறுகின்ற ஆசன எண்ணிக்கையில் 60:40 அல்லது 50:50 எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. சில நேரங்களில் தொகுதி அதிகரிக்க சிறிய overhang பிரச்சினை வரலாம், ஆனால் நாங்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையில் எதுவித நேரடித்தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம் overhang பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. அதேநேரம் overhang என்பது எல்லாக்கட்சிகள் மீதும் சில சாதக பாதகத் தாக்கத்தைச் செலுத்தும். சில நேரம் முஸ்லிம் கட்சிகளுக்கும் சில சாதக தாக்கத்தைச் செலுத்தக் கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றன.

இவை தொடர்பாக overhang ஐப் பற்றி பார்க்கும்போது பார்ப்போம்.

எனவே, இவர்கள் 60:40 ஐ 50: 50 ஆக குறைத்து பாதிப்பைக் குறைத்தோம்; என்றார்களே! தயவு அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு நீங்கள் குறைத்த பாதிப்பு என்னவென்று.

அவ்வாறாயின் இந்தத் தேர்தல் பாதிப்பு, பாதிப்பு என்று எல்லோரும் கூறுகின்றோமே. அந்த பாதிப்பு என்ன?

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -