அகமட் எஸ். முகைடீன்-
43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா மாத்தறை கொட்டவில விiயாட்டு மைதானத்தில் நேற்று (22) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. மூன்று தினங்களுக்கு நடைபெறும் இவ்விளையாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் ஒன்றான ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டி இன்று (23) சனிக்கிழமை மாலை மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 55 கிலோகிராம் தொடக்கம் 90 கிலோகிராமக்கு மேற்பட்ட ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும் சாண்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.