மஹிந்த 49ஆவது பணக்காரராம் [Political Gossip]

டந்த ஆட்சியில் மஹிந்தவும் மஹிந்தவின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் 36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 86 கோப்புகள் மீதான விசாரணைகளில் 40 கோப்புகள் மீதான விசாரணைகள் முடிவுற்று அதன் பெறுபேறுகள் இலங்கை அரசுக்கு வரத் தொடங்கியுள்ளன என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் துபாய் வங்கியில் மஹிந்தவினதும் அவரது மகன் நாமலினதும் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

மஹிந்தவின் கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாவாம்.கேட்கும்போது தலையே சுற்றுகிறது.இது உண்மை என்றால் மஹிந்த சர்வதேச அளவில் 49ஆவது பணக்காரராம்.

அப்போ இன்னும் சிறிது காலம் ஆட்சியில் இருந்திருந்தால் பிள்கேட்ஸை முந்தி இருப்பார்போல.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -