க.கிஷாந்தன்-
ஊவாபரணகம உடுஹவெர கொத்தலாகொட பிரதேசத்தில் மரக்கறி தோட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்
22.09.2017 அன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு மிருகங்களிடம் இருந்து பயிரை பாதுகாக்கவென குறித்த நபரால் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி மேற்படி நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடுஹவெர கொத்தலாகொட பகுதியை சேர்ந்த பீ.எம்.குணசேகர என்ற 72 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.