500 மில்லியன் ரூபாய் உதயனிடம் நஷ்டஈடு கோரி அமைச்சர் சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல்-

தயன் பத்திரிகையானது பல செய்திகளிலே சிவராம்-தராக்கியினுடைய கொலையுடன் கந்தையா சிவநேசனைத் தொடர்புபடுத்தியும், அவர்தான் கொலையாளி என்பது போலவும் விசமத்தனமாக தொடர்ந்து செய்திகளை எழுதி வந்தது.

இந்நிலையில் வட மாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் சார்பாக அவருடைய சட்டத்தரணி 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி கோரிக்கைக் கடிதம் ஒன்றினை உதயன் பத்திரிகைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சட்டத்தரணி தனது கடிதத்தில்,

சிவராம்-தராக்கியின் கொலையுடன் உதயன் பத்திரிகை தன்னைத் தொடர்புபடுத்தி, தன்னுடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பதாக எனது கட்சிக்காரர் உங்களிடம் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரியிருக்கின்றார்.

ஆகவே, ஒரு மாத காலத்திற்குள் நஷ்டஈட்டு தொகையினை தாங்கள் செலுத்தத் தவறும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்திருக்கின்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -