மு.இராமச்சந்திரன்-
பெருந்தோட்ட தேயிலை தொழில்துறையை மேம்டுத்தும் வகையில் கலனி வெளி கம்பனியில் சிறப்பாக சேவையாற்றிய தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் 04.09.2017 நடைபெற்றது. களனிவெளி பெருந்தோட கம்பனியின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களை சேர்ந்த 550 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க்கப்பட்டனர்.
நீண்டகாலம் சிறப்பாக சேவையாற்றிய 14 தோட்டங்களை சேர்ந்த 450 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் சிறப்பாக சேவையாற்றிய 100 பேருக்குமாக 550 பேர் கௌரவிக்கப்பட்டனர். களனிவெளி பெருந்தோட்ட கம்னியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரத்ஸ்ரீமான தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜாதுரை. பொது முகாமையாளர் அனுர விஜோகோன் ஊட்பட பலர் கலந்துகொண்டனர்.