மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான விசேட கண்டனத் தீர்மானம் கிழக்கில்

அப்துல்சலாம் யாசீம்-

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான விசேட கண்டனத் தீர்மானம் கிழக்கு மாகாண சபையில் இன்று (07) நிறைவேற்றப்பட்டது.

மாகாண சபை அமர்வு காலை 10.00 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலமையில் கூடியபோது இதற்கான விஷேட பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்பித்தார்.

இதனை வழிமொழிந்து உறுப்பினர் ஆர்.அன்வர் உரையாற்றினார். இந்தத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் விவாதமின்றி பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதாக தவிசாளர் சபையில் அறிவித்தார்.

மியன்மார் பிரதேசத்தில்இ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைத் தடுக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களுக்கு இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -