ஹம்ஸா கலீல்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை கையளிக்கும் நிகழ்வு 23.09.2017 சனிக்கிழமை புனாணை ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இணைப்பாளர்களான எம்.எஸ் தாஹிர், முஹமட் பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்கம் மற்றும் ஸல் ஸபீல் இளைஞர் கழகங்கத்திற்கு மேற்படி பொருட்களை வழங்கி வைத்தார். இதன் போது ஜெயந்தியாய தக்வா ஜும்ஆ பள்ளிவாயல் சுற்றுமதில் நிர்மாணப்பணிகளுக்காக 210,000 ரூபாய் நிதியும் இராஜாங்க அமைச்சர் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புனாணை ஜெயந்தியாய பிரதேச முக்கியஸ்தர்கள், இராஜாங்க அமைச்சர் அவர்களின் இணைப்பாளர்களான முஹமட் பாறூக், எம்.எஸ் தாஹிர், முஹம்மட் லரீப்f மற்றும் அஹமட் ஹிராஸ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.