அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை பொதுமக்களுக்கு கொண்டு செல்லுதல் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களூக்கான செயலமர்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்-

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கான பொதுமக்களை விழிப்பூட்டல் ,பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தலைமையில் அமைச்சின் செயலாளர் திரு.கிங்சிலி பெர்னான்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2017.09.28 எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலை ஜேஹப் பார்க் ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கான பொதுமக்களை விழிப்பூட்டல் அனர்த முகாமைத்துவ தகவல்களை கிராம மட்டம் வரை பிரச்சாரம் செய்தலானது அனர்த்த அபாயத்தை குறைப்பதற்கும் அனர்த்தத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் விளைவுகளை குறைப்பது அத்தியாவசிய தேவையாக காணப்படுகிறது .

மாவட்ட மட்டத்தில் மக்களை விழிப்புணர்வு செய்தல் அனர்த்த முகாமைத்துவத்துவ நிலையத்தினால் செய்யப்படுகிறது.அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக சரியான தகவல்களை கிராம மட்டம் வரை கொண்டு செல்வதில் பிரதேச ஊடகவியலாளான தங்களது வகிபங்கு தொடர்பில் தெளிவுபடுத்தும் செயற்பாட்டை வலுப்படுத்தலும் மிகவும் முக்கியமான காரணமாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் செயலமர்வில் ஊடகவியலாளர்களை தவறாது கலந்து கொள்ளுமாறும் பங்குபற்றுனர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -