போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த அரசாங்கம் மதுவை ஊக்குவிக்கிறது..

போதைப் பொருளை ஒழிக்கும் பிரச்சாரத்துடன் ஆட்சியை கைப்பற்றிய நல்லாட்சி அரசினது காலத்தில் சாதாரணகடைகளிலும் மதுபானங்களை விற்பனை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை கண்டிக்கத்தக்கவிடயமென பாராளுமன்ற உறுப்பினர் ..... தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்...

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதை ஒழிப்பு விடயத்தில் மிகவும் அக்கரை கொண்டவர் போன்றுதனது செயற்பாடுகளை அமைத்திருந்தார். தற்போது பார்க்கின்ற போது முன்னைய ஆட்சிக் காலங்களை விடஇவ்வாட்சியிலேயே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களிடையே போதை பொருள்பாவனை மிகவும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சாதாரண கடைகளிலும் மதுபானங்கள் விற்கும் வகையில் செயற்பாடுகளைமுன்னெடுக்கவும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மதுபான உற்பத்தி அனுமதிகளை இலகுவாக்கவும்சிந்திப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

சாதாரண கடைகளில் மதுபானம் விற்கும் நிலை ஏற்பட்டால், இலங்கையில் மதுபானப் பயன்பாடு, அதனால்ஏற்படத்தக்க கலாச்சார சீர்கேடுகள் என்பன எங்கு நிற்கும் என்பதை கற்பனை கூட பன்னிவிட முடியாது. இதுதொடர்பில் இக் கருத்தை கூறிய அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிநாடுகளில் இவ்வாறான முறைமை உள்ளதைமுன்னுதாரணமாக காட்டியுள்ளார். இதில் கூட வெளிநாடுகளைத் தான் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

வெளிநாட்டின் இத்தகைய கலாச்சார முறைமை இலங்கைக்கு சரிவாராது. வெளிநாடுகளில் எத்தையோ சிறந்தமுன்மாதிரிகள் உள்ள போது இதனை இவ்வரசு தூக்கிப்பிடிப்பதன் காரணம் என்ன? கல்குடாவில் மிகப் பெரியமதுபான உற்பத்தி சாலை ஒன்று அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் உற்பத்தி பொருட்களை இலகுவாகவிற்பனை செய்யும் வகையில் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகமும்உயர்மட்டத்தினரிடையே உள்ளது.

இன்று இலங்கையில் போதைப் பொருள் பாவணை அதிகரித்து காணப்படுவதற்கு யார் காரணம் என்பதைஇவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். இலங்கையில் மருந்துக்கென கூறி, இலங்கை அரசு இலங்கைஇராணுவத்தினரை கொண்டு கஞ்சா உற்பத்தியில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலை தொடர்ந்தால் இலங்கை நாடானது சீரழிந் சின்னாபின்னமாகிவிடும் என்பதில் ஐயமில்லை. இலங்கைநாட்டை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலமிதுவாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -