கனனி மயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்-

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அடையாள அட்டைகளை கனனி மயப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்ட்ட அடையாள அட்டையாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள ஊழியர்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு-அம்பாறை-திருகோணமலை ஆகிய பிராந்திய சுகாதார திணைக்களங்கள் காணப்படுகின்றன.
அதிலும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கையால் எழுதப்பட்ட நிலையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

உலகத்தில் பல கண்டு பிடிப்புக்களும்- அபிவிருத்திகளும் இடம் பெற்று வரும் நிலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு பல கோடி ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டும் தமது திணைக்களங்களில் சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்குவதில் அசமந்த நிலையில் இருப்பதினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும்.சுகாதார திணைக்களமும். கீழ் மட்டத்திலேயே செயற்பட்டு வருவதை உணர்த்துவதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் டிஜிட்டல் முறையில் கனனி வடிவமைக்கப்ட்ட அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களமும் நவீன விதத்திற்கேற்ற மாதிரி ஊழியரகளின் மனதை கவரும் விதத்தில் தமது சேவைகளை வழங்க முன்வர வேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பேனையால் எழுதப்பட்ட நிலையில் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைகள் ஆறு மாதத்திற்கே பாவிக்க முடியும் எனவும் இனிவரும் காலங்களில் டிஜிடல் முறையில் வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸாரிடம் வினவிய போது ஊழியர்களின் கோரிக்கைகளை வரவேற்பதாகவும் நவீன காலத்தில் பேனையால் எழுதி வழங்குகின்ற அடையாள அட்டைகளை பாவிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருந்தபோதிலும் எதிர்வரும் காலங்களில் நவீன மயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -