இனவாதிகளுக்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் செய்த முறைப்பாடுகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம்..

னவாதிகளுக்கு எதிராக அஸாத் ஸாலி உள்ளிட்டவர்கள் செய்த முறைப்பாடுகளை ஒரு புத்தகமாக வெளியிட முடியும்என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.

டான் பிரியசாத், அமித், சித்தாரத்ன போன்றவர்களுக்கு எதிராகபொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைப்பதிவு செய்திருந்தார்.

ஞானசார தேரரை அவரது நண்பர் மைதிரிபால காபாற்றியாத கூறிவிட்டு மறுபுறம் இனவாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வது வேடிக்கையான விடயமாகும்.

அதாவது இனவாதிகளுக்கு எதிராக எவ்வளவு முறைப்பாடுகளை மேற்கொண்டாலும் அதற்கு எது வித பயனும் இல்லை என கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் முறைப்பாடுகளை பதிவு செய்வது ஊடக கண்காட்சி நடத்தவே அன்றி வேறு எதுவுக்கும் அல்ல.

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக ஊடகங்களில் கூறிவிட்டு மறுநாளே அதே ஜனாதிபதியுடன் வெளிநாடு சென்ற அஸாத் சாலிக்கு இந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்ய எதுவித அறுகதையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -