ஆளுனருக்கு அதிகாரம் வழங்கப்படுவதென்பது மக்களாட்சி முறைமைக்கு எதிரானதாகும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அவசர காலச் சட்டங்களில் மாத்திரமே ஆளுனருக்கு ஆட்சியில் பங்கேற்கக் கூடிய சாத்தியப்பாடு அரசியலமைப்பில் உள்ளதையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு முரணாக மக்களால் தமது மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளதாக கிழக்கு மாாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒரு தனி நபரிடம் ஆட்சியை கையளிப்பது சர்வாதிகாரப் போக்குடைய நிலைமையை மாகாணத்தில் ஏற்படுத்தும் எனவும் கிழக்கு முதல்வர் கூறினார்,
ஆலோசனைகளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் இன்றி மாகாணம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுனருக்கு வழங்கப்படுவது சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கில் மீண்டும் பழைய நிலைமையை ஏற்படுத்த முயல்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது,
நாம் தான’ ஆட்சியில் நீடிக்கவேண்டும் என்ற எந்தவொரு எண்ணப்பாடும் எங்களுக்கு இல்லை என்பதுடன் நாங்கள் கோருவதெல்லாம் மக்களால் தேர்நதெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை ஆளவேண்டும் என்பதெயாகும்.அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல்கள் காலந் தாழ்த்தாது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆளஞந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்த்துடன் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.