பிச்சை வேண்டாம் நாயை பிடி...!

க்களிடம் சென்று தைரியமாக தேர்தலை சந்திப்பதற்கு பயந்து கொண்டு, 20வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபை தேர்தலையும் தள்ளிப்போடுவதற்கு ஒவ்வொரு மாகாணசபைகளிடமும் பிச்சை கேட்டு தெறிகிறது இந்த நல்லரசாங்கம். ஆட்சியில் உள்ள நல்லரசாங்கம் இதுவரை ஒழுங்கான முறையில் நாட்டை வழிநடத்தியிருந்தால், தேர்தலின் மூலம் உரிய நேரத்தில் மக்களை சந்திப்பதற்கு பயந்திருக்கவே மாட்டார்கள். மாறாக ஒவ்வொரு தேர்தலையும் உரிய நேரத்தில் நடத்தி, நான்தான் "மக்கள் சக்தியுள்ளவன்" என்று மார்வு தட்டிக்கொண்டிருக்கும் மஹிந்தவுக்கு சாட்டையடி கொடுத்திருப்பார்கள். 

அதற்கு முடியாததன் காரணமாகவே உரிய காலத்தில் நடத்தவேண்டிய தேர்தல்களை நடத்த முடியாமல் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு காலத்தை கடத்துகின்றார்கள் என்பதே உண்மையாகும். உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஏதோ காரணம் சொல்லி காலம் கடத்தி வந்தவர்களுக்கு, மாகாணசபை தேர்தல்கள் பூதம் போல் கண்முன்னால் வந்து மிரட்டுகிறது. அதற்காக மாகாணசபை தேர்தல்களையும் ஒரு காரணத்தை சொல்லி தடுத்துவிடலாம் என்ற என்னத்தில் 20வது திருத்தத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மாகாணமாய் தவியாய் தவித்து அலைகின்றது இந்த நல்லாட்சி அரசாங்கம். 

இந்த 20வது திருத்தச்சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், நான்கு விடயங்களை குறிவைத்துத்தான் நிறைவேற்ற ஓடித்தெறிகின்றது இந்த நல்லரசாங்கம். 
1) சகல மாகாணசபைகளிலும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது. 
2)மாகாணசபைகளின் தற்போதைய வாழ் காலத்தை நிர்ணயிப்பதை பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்குள் கொண்டுவருவது. 
3) அதன் மூலம் சில மாகாணசபைகளின் வாழ்காலத்தை நீடிப்பது. 
4) சில மாகாணசபைகளின் வாழ்காலத்தை குறைப்பது. 

இதன் உண்மையான நோக்கம் என்னவெனில், இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், மாகாணசபைகளின் காலத்தை தாங்களே நிர்ணயித்து அதன் மூலம் அந்த சபைகளின் அதிகாரங்களை பலம் இழக்கச் செய்துவிட்டு, அதன்பின் அச் சபைகளின் அதிகாரங்களை பாராளுமன்றம் கைப்பற்றிக் கொள்வதாகும். அதன் மூலம் மாகாணசபை தேர்தல்களை 2019வரை இழுத்துச்சென்றுவிட்டு, அதற்கப்புரம் பாராளுமன்ற தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலையும் நடத்திவிட்டு யாரிடமாவது நாட்டை ஒப்படைத்துவிட்டு, அதன் பின் முன்னால் ஜனாதிபதி என்ற அந்தஸ்தோடும், அதிகாரத்தோடும் ஒதுங்கிவிடலாம், அதன் பின் நடப்பவை நடக்கட்டும் என்று நினைக்கும் சிலபேருடைய நினைப்பேயாகும். 

அதற்காக 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பறிக்கின்ற விடயமானது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்றாகும். எங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைபோதாது என்று வாதாடி வரும் தமிழ் சமூகம், இதனை அங்கீகரிக்குமா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் காலம் முடிந்தாலும் இந்த சட்டத்தின் பிரகாரம் மாகாணசபையின் வாழ் காலம் நீடிக்கப்படபோகின்றது, அதனால் நாம் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் தூங்கலாம் என்று நினைக்கும் சில மாகாணசபை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலம் முடிவடைய இருக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு, தொடர்ந்தும் பதவி வகிக்கலாம் என்று நாம் கூறினால் நமது வழிக்கு அவர்கள் வந்துவிடுவார்கள் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசாங்கம் இந்த சட்டத்தை நிறைவேற்ற முனைகிறது. 

இதற்கு தன்மானமுள்ள எந்த வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் பழியாகமாட்டார்கள். ஆகவே, யாருக்கோ பயந்துகொண்டு உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பயந்து கொண்டு, மாகாண மக்களின் ஜனநாயக உரிமையில் கைவைப்பது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். எனவே, இந்த 20வது திருத்தம் என்பது மக்களின் ஜனநாயக உரிமையை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை என்பதை அரசாங்கமும் அதேபோன்று மாகாணசபை உறுப்பினர்களும் புரிந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். 
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -